अत्यन्तशीतलमतन्द्रयतु क्षणार्धम्
अस्तोकविभ्रममनङ्गविलासकन्दम् ।
अल्पस्मितादृतमपारकृपाप्रवाहम्
अक्षिप्ररोहमचिरान्मयि कामकोटि ॥॥
அத்யந்த ஶீதலமதந்த்ரயது க்ஷணார்த்தம்
அஸ்தோக விப்ரம் அனங்கவிலாஸகந்தம் |
அல்ப ஸ்மிதாத்ருதம் அபாரக்ருபா ப்ரவாஹம்
அக்ஷிப்ரரோஹம் அசிரான்மயி காமகோடி ||24||
காமகோட்டத்து உறைபவளே! மிக்க குளிர்வானதும்,
மிகவும் அழகுள்ளதும், மன்மதனின் திருவிளையாடல்களுக்குக் காரணமானதும், மென்சிரிப்போடு
உள்ளதும், கரைகாணாத கருணை வெள்ளத்தை உடையதுமான உன்னுடைய கடைக்கண் பார்வையானது, விரைவில்
என்னிடம் வந்து ஓர் அரை நொடி நேரமாவது தங்கி இளைப்பாறட்டும்.
குளிர்வும் அழகதும் கூடி அனங்கன் குலவியங்கு
விளையாடு மேதுவும் வெண்மென் நகையால் விளங்குவதும்
விளிம்பில் கருணையின் வெள்ளக் கடைவிழி
வீச்செனதுள்
இளைப்பா றுகவே இமைப்போதும் காமாட்சீ இப்பொழுதே
ஏது - காரணம்; வெண்- ஒளி; விளிம்பில் - கரையிலாத
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam