केशप्रभापटलनीलवितानजाले
कामाक्षि कुण्डलमणिच्छविदीपशोभे ।
शङ्के कटाक्षरुचिरङ्गतले कृपाख्या
शैलूषिका नटति शङ्करवल्लभे ते ॥23॥
கேஶப்ரபாபடல நீல விதானஜாலே
காமாக்ஷி குண்டலமணிச்சவி தீபஶோபே |
ஶங்கே கடாக்ஷருசிரங்கதலே க்ருபாக்யா
ஶைலூஷிகா நடதி ஶங்கரவல்லபே தே ||23||
சங்கரரின்
மனையாளான காமாக்ஷியே! உனது கிருபையாம் நடிகை உன்னுடைய கேசத்தின் காந்திப்படலமாகிற கருங்கூரையைக்
கொண்டதும் குண்டலத்தின் இரத்தின மணியாம் விளக்கினால் ஓளிர்வதும், மிக அழகியதுமான உனது
கடாக்ஷமாகிய அரங்கினில் நடனமாடுகிறாள்.
கருணையாம் கூத்தியுன் காஞ்சி யொளிபோல் கருவிதானம்,
இரத்தினக் குண்டலம் ஏற்றிய
தீபம் எரிந்தொளிரும்
அரங்காம் நினது அழகு கடைக்கண்ணில் ஆடுவளாம்!
அரனார் மனையாளே! அன்னைகா மாட்சீ!
அழகுடனே!
கூத்தி - நடிகை; காஞ்சி - கேசம்;
விதானம் - கூரை;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam