अम्ब स्मरप्रतिभटस्य वपुर्मनोज्ञम्
अम्भोजकाननमिवाञ्चितकण्टकाभम् ।
भृङ्गीव चुम्बति सदैव सपक्षपाता
कामाक्षि कोमलरुचिस्त्वदपाङ्गमाला ॥22॥
அம்ப ஸ்மரப்ரதிபடஸ்ய வபுர்மனோஜ்ஞம்
அம்போஜகானனமிவாஞ்சிதகண்டகாபம் |
ப்ருங்கீவ சும்பதி ஸதைவ ஸபக்ஷபாதா
காமாக்ஷி கோமலருசிஸ்த்வதபாங்கமாலா ||22||
தாயே காமாட்சீ!
கண்ணுக்கினிய ஒளி பொருந்தியவுன் கடைக்கண் வரிசையானது, தாமரைக்காடுபோல், தாமரைத்தண்டுகளின்
முட்கள்போல் மயிர்கூச்சல் கூடியதும், மன்மத வைரியான, பரமசிவனின் அழகிய உடலை வண்டுபோல்
எப்போதும் மிகுந்த ஆசையுடன் முத்தமிடுவது போலிருக்கிறது.
காமாட்சீ தாயேயுன் கண்ணதன் தீங்கடைக்
கண்வரிசை
தாமரைக் காடுபோல் தாம்புளகம்
கொண்ட தளிமமும்
காமாரி நாதன் கவினுடல் மொய்க்கும்
கழுதினைப்போல்
தாமுத்த மீயும் தகாவு முடைத்திட்ட
தன்மையதே
தளிமம்
- அழகு; தீம்(ங்)- இனிய; புளகம்- மயிர்க்கூச்சம்; காமாரி - காமனின் வைரி; கழுது - வண்டு;
தகா - மிக்க ஆசை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam