ஜூன் 06, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 97

सत्कृतदेशिकचरणाः सबीजनिर्बीजयोगनिश्रेण्या
अपवर्गसौधवलभीमारोहन्त्यम्ब केपि तव कृपया 97

ஸத்க்ருத தேசிக சரணா: ஸபீஜ நிர்பீஜ யோக நிச்ரேண்யா |
அபவர்க ஸௌத வலபீம் ஆரோஹந்த்யம்ப கேςபி தவ க்ருபயா ||97||

தாயே!  குருவின் திருவடிகளைப் பூசித்த சில புண்ணியர்கள் ஒரு வித்தின் துணையோடு உன்னை தியானிக்கும் ஸபீஜயோகம், பின் அவ்வித்தும் காரணமாயிலாத சமாதி என்னும் பேருணர்வாய் நிலைக்கும் நிர்பீஜயோகம், என்னும் யோகமாம் படிகளின் வழியே உன்னுடைய அருளினால் முக்தி என்னும் மாளிகையில் உப்பரிகையை அடைகிறார்கள்.

குருவின் திருவடி கும்பிடும் புண்ணியம் கொண்டசிலர்
ஒருவித் துடனேயும், ஒன்று மிலாமலும் உள்ளயோக
உருவாம் படிகளின் ஊடே அடைவரே உன்னருளின்
மெருகொடு முக்தியின் மிக்கதாம் மீகார மீதினிலே!


மீகாரம் - மாளிகையின் உப்பரிகை;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...