जलधिद्विगुणितहुतबहदिशादिनेश्वरकलाश्विनेयदलैः ।
नलिनैर्महेशि गच्छसि सर्वोत्तरकरकमलदलममलम् ॥96॥
ஜலதி த்விகுணித ஹுதவஹ திசா தினேச்வர கலாச்வினேயதலை: |
நலினைர் மஹேசி கச்சஸி ஸர்வோத்தர கர கமலதலம் அமலம் ||96||
மகேசுவரியே! 4-6-10-12-16-2 ( நான்கு கடல்கள், ஆறு கனல்கள், பத்து திக்குகளும்,
பன்னிரண்டு ஆதித்யர்கள், பதினாறு கலைகளும், இரண்டு அசுவினி தேவர்களும் ) என்ற எண்ணிக்கைகளில்
இதழ்களுள்ள கமலங்கள் வழியே (சக்கரங்கள்), தூய்மையும், யாவற்றுக்கும் மேற்பட்ட, ஆயிரம்
இதழ்களுடைய கமலத்தை நீ அடைகின்றாய்!
கடலின், கனலாறின், காட்டையீ ரைந்ததன், காலையதன்
வடிவாமீ றாறின், மதிகலை ஈரெட்டின், வானிருவர்
வடிவின் கமல மடல்கள் வழியாய் மகேசுவரீ!
அடைந்தாய் உயர்தூய ஆயி ரமிதழ்கொள் அம்புயத்தே
கடல் நான்கு; கனல் ஆறு; காட்டை
- திசை; ஈரைந்து - பத்து; காலை - சூரியன்; மதிகலை - சந்திர பிறைகள்; வானிருவர்
- அசுவினி தேவர்கள்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam