ஜூன் 19, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 9

सूर्याश्रयप्रणयिनी मणिकुण्डलांशु-
लौहित्यकोकनदकाननमाननीया
यान्ती तव स्मरहराननकान्तिसिन्धुं
कामाक्षि राजति कटाक्षकलिन्दकन्या 9

ஸூர்யாஶ்ரய ப்ரணயினீ மணிகுண்டலாம்ஶு-
லௌஹித்ய கோகனத கானன மானனீயா |
யாந்தீ தவ ஸ்மரஹரானன காந்திஸிந்தும்
காமாக்ஷி ராஜதி கடாக்ஷகளிந்த கன்யா ||9||

காமாக்ஷியே உனது கடைக்கண்ணாம் களிந்த பருவதத்தின் குமாரி (யமுனை நதி), சூரியனை நெருங்குவதில் விரும்பம் கொண்டதாயும், சிவந்த இரத்தினக் குண்டலங்களின் ஒளியே கூடிய செந்தாமரைக்கூட்டம் உள்ளதுபோல, கொண்டாடப்படுவதாயும், மன்மதனின் வைரியாம் சிவபெருமானின் முகவொளியாம் கடலை அடைவதாகவும் விளங்குகிறது! (கண்ணன் காளீயனை அடக்கிய மடு, யமுனை நதிக்கரையில் இருந்த ஓர் நீர் நிலையாக இருந்திருக்கவேண்டும். அதனால், அதுவும் காளிந்தி (களிந்த) மடு என்றே அழைக்கப்பட்டிருக்கவேண்டும்!

களிந்தத்தின் கன்னியாம், காமாட்சீ, உந்தன் கடைவிழிகள்
ஒளியோன் அணைப்பை உவக்கும்; குழையின் ஒளிர்சிவப்பில்
குளிக்கும்; கமலக் குவைபோற்றும்; மன்மதன்  கூற்றுவனார்,

அளிசெய் அரன்முக அஞ்சதன் ஆழி அடைவனவே!

களிந்தம் - யமுனை உற்பத்தியாகும் பர்வதம்; ஒளியோன் - சூரியன்; குவை - கூட்டம்; மதன் கூற்று - மன்மதனுக்கு எதிரி; குழை - குண்டலம்; அளி - அருள்; அஞ்சு- ஒளி; ஆழி - கடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...