ஜூன் 18, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 8

छायाभरणे जगतां परितापहारी
ताटङ्करत्नमणितल्लजपल्लवश्रीः
कारुण्यनाम विकिरन्मकरन्दजालं
कामाक्षि राजति कटाक्षसुरद्रुमस्ते 8

சாயாபரணே ஜகதாம் பரிதாபஹாரீ
தாடங்கரத்ன மணிதல்லஜ பல்லவஸ்ரீ: |
காருண்ய நா விகிரன் மகரந்தஜாலம்
காமாக்ஷி ராஜதி கடாக்ஷ ஸுரத்ருமஸ்தே ||8||

அன்னையே காமாக்ஷி! உன் கடைக்கண்ணாகிய கற்பக விருட்சம், தன் நிழலால் உலகோரின் கானலைப் போக்குகிறது! உன்னுடைய காதணியும் தோடுகளின் இரத்தின ஒளிக்கதிர்களே அவ்விருட்சத்தின் துளிர்கள்; அவ்விருட்சம் கருணையென்னும் மகரந்தத் துகள்களை எங்கும் வாரி இறைப்பதாக உள்ளது!

கற்பக மாகுமாம் காமாட்சீ யுன்கடைக் கண்ணிழல்தாம்
அற்றிடச் செய்யும் அகிலத்தின் தாப அனலதனை!
கற்றோடு வீசும் கதிராம் துளிருடை காத்தருவே,

வற்றாக் கருணை மலர்வீ இறைக்குமே வாரியங்கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...