ஜூன் 20, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 10

प्राप्नोति यं सुकृतिनं तव पक्षपातात्
कामाक्षि वीक्षणविलासकलापुरन्ध्री
सद्यस्तमेव किल मुक्तिवधूर्वृणीते
तस्मान्नितान्तमनयोरिदमैकमत्यम् 10

ப்ராப்னோதி யம் ஸுக்ருதினம் தவ பக்ஷபாதாத்
காமாக்ஷி வீக்ஷண விலாஸகலா புரந்த்ரீ |
ஸத்யஸ்தமேவ கில முக்திவதூர் வ்ருணீதே
தஸ்மான் நிதாந்தம் அனயோரிதம் ஐகமத்யம் ||10||

ஹே காமாக்ஷீ! எப்பொழுது உன்னுடைய பரிவினால், நல்ல செயல்களைச் செய்தவரிடம் திருமகள் என்னும் குலமகள் அடைகிறாளோ, அப்போதே, அவரை முக்தி என்னும் பெண்ணும் கணவனாக வரித்துவிடுகிறாளே! அவ்விரு பெண்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை மிகவும் கூடுதலாகவே உள்ளது!

என்றுன் பரிவால் இனியசெய் தாரை இலக்குமியாள்
சென்றுசேர் கின்றாளோ செல்வியாம் முக்தியும் சென்றவரை
தன்பதி யாய்கொள்வாள் தானுடன்! காமாட்சி தாயவளே!
என்னேயப் பெண்கள் இடையில் இருக்கும் இணைப்பிதுவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...