ஜூன் 21, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 11

यान्ती सदैव मरुतामनुकूलभावं
भ्रूवल्लिशक्रधनुरुल्लसिता रसार्द्रा
कामाक्षि कौतुकतरङ्गितनीलकण्ठा
कादम्बिनीव तव भाति कटाक्षमाला 11

யாந்தீ ஸதைவ மருதாம் அனுகூலபாவம்
ப்ரூவல்லி க்ரதனுருல்லஸிதா ரஸார்த்ரா |
காமாக்ஷி கௌதுக தரங்கித நீலகண்டா
காதம்பினீவ தவ பாதி கடாக்ஷமாலா ||11||

காமாக்ஷீ! உன்னுடைய கடைக்கண் அருளென்னும் மேகவரிசையானது, எப்போதும் தேவர்களாம் காற்றினுடைய ஒத்துழைப்பைக் கொள்கிறது. உன்னுடையப் புருவக்கொடியாம் வானவில்லால் ஒளிர்கிறது; கருணையெனும் நீருண்டு ஈராமாக இருக்கிறது. நீலகண்டனாம் (மயில், பரமசிவன்) மயிலுக்கு மகிழ்ச்சியாம் அலையைக் கூட்டுவதாகவும் உள்ளது.

உன்கடைக் கண்ணெனும் ஊரி வரிசை, உறும்சதீலத்
தின்னிணக் கத்தினை; தேசுறும் பூருவாம் தேவவில்லால்;
இன்னன் பெனும்நீரின் ஈரத்தால், நீல எருத்தனுக்கு
தன்கு அலைகூட்டும் தன்மைத்தாம், காமாட்சீ தாயவளே


ஊரி - மேகம்; சதீலம் - காற்று; இணக்கம் - ஒத்துழைப்பு, எருத்து - கண்டம், கழுத்து; தன்கு - மகிழ்ச்சி; பூரு - புருவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...