साहाय्यकं गतवती मुहुरर्जुनस्य
मन्दस्मितस्य परितोषितभीमचेताः ।
कामाक्षि पाण्डवचमूरिव तावकीना
कर्णान्तिकं चलति हन्त कटाक्षलक्ष्मीः ॥5॥
ஸாஹாய்யகம் கதவதீ முஹுரர்ஜுனஸ்ய
மன்தஸ்மிதஸ்ய பரிதோஷித பீமசேதா: |
காமாக்ஷி பாண்டவ சமூரிவ தாவகீனா
கர்ணாந்திகம் சலதி ஹந்த கடாக்ஷலக்ஷ்மீ: ||5||
காமாக்ஷியே உன்னுடைய கடைக்கண் பார்வையாம்
திருமகளானது, வெண்மையான புன்சிரிப்பாகும் அருச்சுனனுக்கு உதவுவதற்காக, பீமனெனும் சிவனின்
மனத்தை மகிழ்விக்கச் செய்வதற்காக, பாண்டவ (ஐவரது) சேனைபோல் கர்ணனாகிய காதருகே செல்கிறது.
அர்ஜுனம் என்றால் வெண்மையென்றாகும்; பீமசங்கர் என்பது ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று; கர்ணம்
என்பது காதையும், பாண்டவர்களின் வைரியான கர்ணனையும் குறிக்கும்; பாண்டவ சேனை கர்ணன்
அருகே செல்வதுபோல், கடைக்கண், காதருகே நீள்கிறதாம்.
காமாட்சீ! உந்தன் கடைவிழிப்
பார்வை கமலையவள்
சோமன் நிறம்பூத்த சுந்தரப் புன்னகை
சூடுபார்த்தன்
தாமொடு பீமனாம் சங்கரன் உள்ளமுந்
தான்மகிழ
காமுற்று ஐவர் கடகம்போல் செல்லும்
கதிர்மகற்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam