ஜூன் 16, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 6

अस्तं क्षणान्नयतु मे परितापसूर्यम्
आनन्दचन्द्रमसमानयतां प्रकाशम्
कालान्धकारसुषुमां कलयन्दिगन्ते
कामाक्षि कोमलकटाक्षनिशागमस्ते 6

அஸ்தம் க்ஷணான்னயது மே பரிதாபஸூர்யம்
ஆனந்த சந்த்ரமஸம் ஆனயதாம் ப்ரகாம் |
காலான்தகார ஸுஷுமாம் கலயன் திகந்தே
காமாக்ஷி கோமல கடாக்ஷ நிஶாகமஸ்தே ||6||

காமாட்சி தாயே! உன்னுடைய அழகிய கடைக்கண் பார்வையாம் மாலையின் வருகை அனைத்து திசைகளிலும் காரிருளாம் அழகைப் பரப்பி, என்னுடைய உள்ளத்தில் துன்பமாகிய வெப்பத்தை ஒரு கணத்தில் மறையச் செய்யட்டும்; மகிழ்வாம் சந்திரனை வெளிச்சமாகக் கொணரட்டும்.

உன்னொண் கடைக்கண் ஒளியாம்பொன் மாலை உவந்துவந்து
கன்னங் கரியதாம் கங்குல் அழகின் கதிர்பரப்பி
என்னுளத் துன்பாய் எரியு மனலும் இலைகணத்தில்
என்றாகத் தண்ணளி இந்தின் ஒளியினை ஈயட்டுமே


ஒண்- அழகு; கங்குல் - காரிருள்; இந்து- சந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...