आनङ्गतन्त्रविधिदर्शितकौशलानाम्
आनन्दमन्दपरिघूर्णितमन्थराणाम् ।
तारल्यमम्ब तव ताडितकर्णसीम्नां
कामाक्षि खेलति कटाक्षनिरीक्षणानाम् ॥3॥
ஆனங்க தந்த்ர விதி தர்ஶித கௌஶலானாம்
ஆனந்த மந்த பரிகூர்ணித மந்தராணாம் |
தாரள்யம் அம்ப தவ தாடித கர்ணஸீம்னாம்
காமாக்ஷி கேலதி கடாக்ஷ நிரீக்ஷணானாம் ||3||
காமாக்ஷி
தாயே! காம சாத்திரத்தின் விதிமுறைகளில் திறமைகளை காட்டுவனவும், மகிழ்ச்சியால் மெதுவாகச்
சுழல்கின்றவையும், காதுகள் வரையில் நீண்டிருப்பவையுமான, நிலையில்லாத, உனது கடைக்கண்
பார்வைகளுடைய காந்தியானது இனிமையாக விளையாடுகிறது.
மன்மத வேத வழிகளி லேதிறன் வாய்த்தவையும்
இன்புற்று மெல்ல இருபு றமும்சுற்றி ஈர்ப்பதுவும்
அன்னைகா மாட்சிநின்! அள்கள் வரையிலும் ஆன்றுசெல்லும்
உன்கடைக் கண்கள் உமையினி தாயாடி ஓங்கினவே
மன்மத
வேதம் - காமசாத்திரம்; அள்கள்- காதுகள்; ஆன்று - அகன்று, விரிந்து, உமை - காந்தி, ஒளி;
ஆடி - விளையாடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam