मातर्जयन्ति ममताग्रहमोक्षणानि
माहेन्द्रनीलरुचिशिक्षणदक्षिणानि ।
कामाक्षि कल्पितजगत्त्रयरक्षणानि
त्वद्वीक्षणानि वरदानविचक्षणानि ॥2॥
மாதர் ஜயந்தி மமதாக்ரஹமோக்ஷணானி
மாஹேந்த்ர நீலருசி
ஶிக்ஷண தக்ஷிணானி |
காமாக்ஷி கல்பித ஜகத்ரய ரக்ஷணானி
த்வத் வீக்ஷணானி வரதான விசக்ஷணானி ||2||
காமாக்ஷி
தாயே! செருக்கின் பிடியிலிருந்து விடுவிப்பவையும், இந்திர நீலக்கல்லுக்கே ஒளியை கற்பிக்கக்கூடிய
(அதைவிட மிக்க ஒளியுள்ளவை, அதன் செருக்கையும் அடக்குபவை) திறனுள்ளவையும், நீயே உருவாக்கிய
மூவுலகங்களையும் காப்பாற்றுபவையும், வரங்களைத் தருவதில் தேர்ந்தவையுமாக உன்னுடைய கடைவிழிகள்,
உயர்ந்து விளங்குகின்றன.
கனத்துடன்
மூவுல கைக்காக்கும் காமாட்சி காஞ்சிதாயே!
எனதாம் செருக்கின்
இறுக்கும் பிடியை எனிலரிக்கும்,
தனுமேகச் சாய்வுக்கே
சாய்பற்றிக் கற்பிக்கும் தன்மையதாம்,
உனது விழிகள்
உதவும் வரங்களால் ஓங்கிடுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam