ஜூன் 25, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 15

सञ्जीवने जननि चूतशिलीमुखस्य
संमोहने शशिकिशोरकशेखरस्य
संस्तम्भने ममताग्रहचेष्टितस्य
कामाक्षि वीक्षणकला परमौषधं ते 15

ஸம்ஜீவனே ஜனனி சூதஶிலீமுகஸ்ய
ஸம்மோஹனே ஶஶி கிஶோரக ஶேகரஸ்ய |
ஸம்ஸ்தம்பனே மமதாக்ரஹ சேஷ்டிதஸ்ய
காமாக்ஷி வீக்ஷணகலா பரமௌஷதம் தே ||15||

காமாக்ஷீ! உன் பார்வையின் சிறப்பு, மாம்பூவை அம்பாக உடைய மன்மதனை உயிர் பிழைக்க வைப்பதிலும், இளஞ்சந்திரனை தலைக்கணியாய் கொண்ட பரமசிவனை ஆசை கொள்ள வைப்பதிலும், அறிவை வயமாக்கிக்கொள்ளும் மமதையின் சேட்டைகளை நிறுத்தச் செய்வதிலும் ஒரு அருமருந்தாக இருக்கிறது.

மாவின்பூ அம்புடை மாரனு யிர்மீட்க வைப்பதுவும்,
மேவிக்கத் தன்னில், மிளிரிள அம்புலி மீதணிந்தார்
தேவரைச் செய்வதும், தீர்த்தகந் தையதன் சேட்டைநீக்கும்
தேவிகா மாட்சி திருட்டியாம் நன்மருந் தின்சிறப்பே


மேவிக்க - ஆசைக்கொள்ள; திருட்டி - பார்வை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...