चाञ्चल्यमेव नियतं कलयन्प्रकृत्या
मालिन्यभूः श्रतिपथाक्रमजागरूकः ।
कैवल्यमेव किमु कल्पयते नतानां
कामाक्षि चित्रमपि ते करुणाकटाक्षः ॥14॥
சாஞ்சல்யமேவ னியதம் கலயன்ப்ரக்ருத்யா
மாலின்யபூ: ஶ்ரதிபதாக்ரமஜாகரூக: |
கைவல்யமேவ கிமு கல்பயதே னதானாம்
காமாக்ஷி சித்ரமபி தே கருணாகடாக்ஷ: ||14||
அன்னையே காமாக்ஷி! உன் கருணைமிக்க கடைக்கண்கள்,
இயல்பாகவே அலைவனவாய் இருப்பினும், உன்னை வணங்கும் அன்பருக்கு, பாவங்கள் நிறைந்த உலகவாழ்வை,
வேதங்களாம் வழியாகக் கடப்பத்தில் முனைப்புறச் செய்து, வியக்கத்தக்க விதமாய் மோட்சத்தை
எப்படி அமைத்துத்தருகிறது! விந்தைதான்!
கருணை மிகுமுன் கடைக்கண் அலையும் கதியெனினும்
வருத்து மறப்புற வாழ்வினில்
உன்னை வணங்குவோர்கள்
மருவாக் கடக்க மறைவழிக் காட்டிகா
மாட்சியது
விரும்பிடு வீட்டை வியக்கத்
தருவது விந்தைதானே!
கதி -
இயல்பு; அறப்புறம்-பாவம்; மருவா - கலக்காமல்; வீடு - மோட்சம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam