ஜூன் 23, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 13

संस्कारतः किमपि कन्दलितान् रसज्ञ-
केदारसीम्नि सुधियामुपभोगयोग्यान्
कल्याणसूक्तिलहरीकलमाङ्कुरान्नः
कामाक्षि पक्ष्मलयतु त्वदपाङ्गमेघः 13

ஸம்ஸ்காரத: கிமபி கன்தலிதான் ரஸஜ்ஞ-
கேதாரஸீம்னி ஸுதியாமுபபோகயோக்யான் |
கல்யாணஸூக்திலஹரீகலமாம்குரான்ன:
காமாக்ஷி பக்ஷ்மலயது த்வதபாங்கமேக: ||13||

காமாக்ஷியே! உன் கடைக்கண் அருளாம் மேகம் எனது நா வயலுள், தவறாமல் மாரியெனப் பெய்ததால், முளைத்தவைகளும், அறிவாளர்கள் உய்த்துணர்ந்து பயன்கொள்ளும்படியான, மங்களமான கவிதை புனையும் திறனால் நல்லுரைகளாம் பயிர்களை வளரச் செய்யட்டும்.

நாவாம் வயலினுள் நாரமுண் மேகமாய் நற்பொழிவு
தேவிகா மாட்சியுன் தேசாம்க டைவிழிச் செய்வதுவாம்;
மேவுமச் செம்மையால் மெய்ஞா னியர்கள் விதந்துணர
பாவினால் நல்லுரைகள் பல்கிடச் செய்வாய் பயிரென்றே


நாரம் - நீர்; தேசு - ஒளிர்; பல்கு - மிகுதியாக; விதந்து - சிறப்பாய் மிகுந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...