नीलोzपि रागमधिकं जनयन्पुरारेः
लोलोzपि भक्तिमधिकां दृढयन्नराणाम् ।
वक्रोzपि देवि नमतां समतां वितन्वन्
कामाक्षि नृत्यतु मयि त्वदपाङ्गपातः ॥16॥
நீலோzபி ராகமதிகம் ஜனயன் புராரே:
லோலோzபி பக்திமதிகாம் த்ருடயன் நராணாம் |
வக்ரோzபி தேவி நமதாம் ஸமதாம் விதன்வன்
காமாக்ஷி ந்ருத்யது மயித்வத் அபாங்கபாத: ||16||
ஹே காமாக்ஷி! உன் கடைவிழிப்
பார்வை கருத்திருப்பினும், புராரியாம் சிவனுக்கு மிகுதியாக சிவப்பாம் ஆசையைத் தருகிறது.
அது அலைபாய்ந்தாலும், மக்களிடையே பக்தியை மிகுதியாக நிலைக்கச் செய்கிறது; அது கோணலாக
இருப்பினும் சேவிப்போருக்கு, சமநிலையைக் கொடுக்கிறது. அத்தகைய பார்வை என்னிடத்தில்
நர்த்தனம் செய்துகொண்டிருக்கவேண்டும்!
கருத்தாலும் செம்மையே காட்டும் புராரிக்குன் கண்கடையாம்;
திரிந்தாலும் மக்களைத் தேற்றுமே பக்தியில் திண்ணமாக
திருகினும் நல்குமே சீர்நோக்கை, காமாட்சீ! சேவிப்போர்க்கு
இருக்கட் டுமப்பார்வை என்றும் நடனம்செய் எ(தெ)ன்னிடத்தே
செம்மை - சிவப்பு; கண்கடை -
கடைக்கண்; திரிந்தாலும் - அலைந்தாலும்; திருகினும் - கோணாலாயினும், சீர்நோக்கு - சமதிருஷ்டி;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam