ஜூன் 10, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 101

ஆர்யா சதகம் பலஸ்ருதி/பாராயணப் பயன்:

आर्याशतकं भक्त्या पठतामार्याकटाक्षेण
निस्सरति वदनकमलाद्वाणी पीयूषधोरणी दिव्या 101

ஆர்யாசதகம் பக்த்யா படதாம் ஆர்யா கடாக்ஷேண |
நிஸ்ஸரதி வதனகமலாத் வாணீ பீயூஷதோரணீ திவ்யா ||101||

பக்தியுடன் இவ்வார்யா சதகத்தைப் படிப்பவர்களுக்கு, ஆர்யாவின் கடைக்கண் பார்வையால் தாமரைபோன்ற அவர்கள் வாயிலிருந்து தெய்வ வாக்கு, அமுத தாரையாகப் பெருகும்!

பற்றியே அன்னையைப் பாடுமார்யா நூற்றை படிப்போரைப்
பற்றுவாள் ஆர்யா பரிந்தே கடைக்கண்ணின் பார்வையாலே
மற்றவர் பங்கயம்போல் வாயினில் தெய்வத்தின் வாக்காக
உற்றமு தத்தாரை ஊற்றாய் பெருகிடும் உண்மையிதே

इति आर्याशतकं सम्पूर्णम्

|| இதி ஆர்யாசதகம் ஸம்பூர்ணம ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...