ஜூன் 09, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 100

जय जय जगदम्ब शिवे जय जय कामाक्षि जय जयाद्रिसुते
जय जय महेशदयिते जय जय चिद्गगनकौमुदीधारे 100

ஜய ஜய ஜகதம்ப ஶிவே ஜய ஜய காமாக்ஷி ஜய ஜயாத்ரிஸுதே |
ஜய ஜய மஹேசதயிதே ஜய ஜய சித்ககன கௌமுதீதாரே ||100||

உலகின் தாயே வெல்க, வெல்க! மங்களமே வெல்க, வெல்க! காமாட்சியே வெல்க, வெல்க! மலையரசன் மகளே வெல்க வெல்க! மகேசனுக்கு இனியாளே வெல்க வெல்க!  “சித்” என்னும் பரவெளியில் பெருகும் நிலவின் பொழிவே வெல்க வெல்க!

வெல்வுல கன்னையே வெல்மங் களமேநீ வெல்கவெல்க!
வெல்ககா மாட்சியே வெல்மலை யோன்மகளே வெல்வாய்நீ!
வெல்க மகேசர் விரும்பு மனையாளே வெல்கவெல்க!

வெல்சித்தா காயத்தில் வெண்நில வின்னொளியே வெல்நீயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...