परिचितकम्पातीरं पर्वतराजन्यसुकृतसन्नाहम् ।
परगुरुकृपया वीक्षे परमशिवोत्सङ्गमङ्गलाभरणम् ॥83॥
பரிசித கம்பாதீரம் பர்வத ராஜந்ய ஸுக்ருத ஸன்னாஹம் |
பரகுரு க்ருபயா வீக்ஷே பரமசிவோத்ஸங்க மங்கலாபரணம் ||83||
கம்பையாற்றங்
கரையிருந்து பழகியதும், மலையரசன் இமவானின் புண்ணியங்களின் வெளிப்பாடன ஒன்றும், பரமசிவனுடைய
மடிக்கு மங்கல அணியாக இருப்பதுமான மூர்த்தியை, என்னுடைய குருநாதரது அருளால் காண்கிறேன்.
கம்பைக் கரையில் கனிந்துப் பழகிய காட்சியிளை
உம்பர் மலைக்கோன் உமைதந்தை
புண்ணிய ஊழ்ப்பயனை
நம்பர் சிவன்மடி நண்ணுமாம்
மங்கல நாணணியை
பம்பும் குருவின் பரிந்தருள்
பார்வையால் பார்க்கிறேனே
பம்பும் - எழுகின்ற
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam