மே 22, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 82

अधिकाञ्चितमणिकाञ्चनकाञ्चीमधिकाञ्चि काञ्चिदद्राक्षम्
अवनतजनानुकम्पामनुकम्पाकूलमस्मदनुकूलाम् 82

அதிகாஞ்சித மணிகாஞ்சன காஞ்சீம் அதிகாஞ்சி காம்சித் அத்ராக்ஷம் |
அவநத ஜனானுகம்பாம் அனுகம்பாகூலம் அஸ்மத் அனுகூலாம் ||82||

இரத்தினங்கள் மிகவும் இழைக்கப்பட்ட தங்க ஒட்டியாணம் அணிந்தவளும், வணங்கும் அன்பர்களிடத்தில் பரிவுள்ளவளும், நமக்கு ஆதரவாக உள்ளவளுமான ஒருவளைக் காஞ்சீயில் கம்பை நதிக்கரையில் கண்டேனே!

மிக்கிழைக் கப்பட்ட மின்னும் இரத்தின மேகலையாள்
அக்கரை யால்துதி அன்பர்க் கருள்செயும் அம்மையவள்
எக்காலும் ஆதரிக்கும் இன்னகர் காஞ்சீ எழிலாளை

இக்கம்பை எல்லை இருப்பாளைக் கண்டேன் இனிதெனவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...