वेतण्डकुम्भडम्बरवैतण्डिककुचभरार्तमध्याय ।
कुङ्कुमरुचे नमस्यां शङ्करनयनामृताय रचयामः ॥81॥
வேதண்ட கும்ப டம்பர வைதண்டிக குச பரார்த மத்யாய |
குங்கும ருசே நமஸ்யாம் சங்கர நயனாம்ருதாய ரசயாம:
||81||
யானையின்
மத்தகங்களின் பகட்டுடன் செய்யும் போட்டியை மங்கச் செய்யும்படியான பருத்த தனங்களால்
துயருற்ற இடையுள்ளவளும், குங்குமப்பூவின் நிறம் கொண்டதும், சங்கரனின் கண்களுக்கு அமுத
விருந்து போன்றதுமானவளுக்கும் வணக்கம் செய்கிறோம்
மதர்த்திடு மாதங்க மத்தகங் கள்மாண்பு மங்குமாறு
மதர்த்திடு மார்பின் வலத்தால் இடைவாடும் வஞ்சியளற்
புதக்குங் குமப்பூவைப் போல்நிறத் தாளமுதம் போலூட்டம்
பதந்தூக்கிப் பார்த்திடவும் பாலிப்பாள் பாதம்
பணிவோமே
மதர்ப்பு - பூரித்து; மாதங்கம் - யானை; வலம் - பளு; பதந்தூக்கி - சங்கரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam