देशिक इति किं शङ्के तत्तादृक्तव नु तरुणिमोन्मेषः ।
कामाक्षि शूलपाणेः कामागमसमयदीक्षायाम् ॥80॥
தேசிக இதி கிம் சங்கே தத் தாத்ருக்தவ நு தருணிமோன்மேஷ: |
காமாக்ஷி சூலபாணே: காமாகம ஸமய தீக்ஷாயாம் ||80|| (ஸமய- யஜ்ன)
காமாட்சியே!, காமாகம
வழிமுறைகளை கற்பதாகிய வேள்வியில் சூலக்கரனாம் சிவபெருமானுக்கு தீட்சை தருகிற குரு உனது
தனிச் சிறப்புற்ற அவ்விளமையின் எழிலும், மலர்ச்சியுமே என்று நான் ஐயுறுகிறேன். அதாவது
காமாட்சி தேவியின் அலகிலா எழிலும், இளமையுமே சிவபெருமானின் இச்சையைத் தூண்டுவன.
காமவேத சாத்திரம் கற்கின்ற வேள்வியில் காமாட்சீ!
வாமபா கத்துனை வைத்தசூல மேந்தும் மகேசர்க்கு
நேமமாய் தீட்சை நிறைக்கும் குருயாது? நின்னுடைய
ஏமவெ ழில்சேர் இளமையோ? ஐயுற்றேன் என்மனத்தே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam