पुरमथनपुण्यकोटी पुञ्जितकविलोकसूक्तिरसधाटी ।
मनसि मम कामकोटी विहरतु करुणाविपाकपरिपाटी ॥75॥
புரமதன புண்யகோடீ புஞ்ஜித கவிலோக ஸூக்தி ரஸதாடீ |
மனஸி மம காமகோடீ விஹரது கருணா விபாக பரிபாடீ ||75||
முப்புரமெரித்தோனின்
நல்வினைப் பயனாயவள், கவிஞர் கூட்டத்தின் வாக்கின் இரசங்களின் சேர்க்கையின் உருவாக இருப்பவள்,
மிகுந்த கருணையே உருவெடுத்து வந்தாற்போன்றவள். இந்த காமகோடி (காமாட்சியானவள்) என் மனதில்
விளையாடட்டும்.
முப்புரம் தீயெரி முக்கண்ணன் நல்வினையால் மூண்டாளாம்;
ஒப்பில் கவிக்கூட்டின் ஒண்சொற் சுவைபோல் உருவினளாம்;
துப்பாய் கருணைத் துலக்கமாய்
வந்தாற்போல் தோன்றுகின்ற
இப்பாவை
காமாட்சி என்மனத் தேயாடி ஏகலாமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam