वेदमयीं नादमयीं बिन्दुमयीं परपदोद्यदिन्दुमयीम् ।
मन्त्रमयीं तन्त्रमयीं प्रकृतिमयीं नौमि विश्वविकृतिमयीम् ॥74॥
வேதமயீம் நாதமயீம் பிந்து மயீம் பரபதோத்யத் இந்துமயீம் |
மந்த்ரமயீம் தந்த்ரமயீம் ப்ரக்ருதிமயீம் நௌமி விச்வவிக்ருதிமயீம் ||74||
மறை, இசை, மாசக்திவடிவின்வித்தென
இவற்றின் உருவங்களாகவும், முக்தியில்
உதிக்கும் சந்திரன் உருவாகவும், மந்திர (மறைமொழி),
தந்திர வடிவங்களாகவும், மூலப் பொருளாகவும்,
உலகில்
உள்ள எல்லாவற்றின் பரிணாமமாக விரிகின்றதுமாக உள்ள
ஒன்றை (காமாட்சியை) நமஸ்கரிக்கிறேன்.
மறையிசை யாகவும் மாசக்தி யின்வித்து மானவுரு;
இறைமுக் தியிலே எழுகின்ற சந்திரன் என்னுமுரு;
மறைமொழி தந்திர மாகு வுரு;மூல மானவுரு;
நிறைந்து பலவாய் நிலவு மதைத்துதித்து நிற்பேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam