लीये पुरहरजाये माये तव तरुणपल्लवच्छाये ।
चरणे चन्द्राभरणे काञ्चीशरणे नतार्तिसंहरणे ॥72॥
லீயே புரஹரஜாயே மாயே தவ தருண பல்லவச்சாயே |
சரணே சந்த்ராபரணே காஞ்சீசரணே நதார்தி ஸம்ஹரணே ||72||
முப்புரங்களை அழித்தவரின் மனைவியே! மாயையே!
இளந்தளிர் போல உள்ளவளே! சந்திரனை தலையில் சூடியவளே! காஞ்சீபுரியை இருப்பிடமாகக் கொண்டவளே;
வணங்குவோர் துன்பங்களை போக்குபவளே! உன்னுடைய பாதத்தில் இலயமடைகிறேன்!
திரிபு ரமழித்தோர் தேவியே! மாயே! சிறுதளிர்போல்
உருவே! மதியை உகந்த சிரத்தவளே! ஒண்காஞ்சீ
புரியை இருப்பாய் புரிந்தவ ளே!சேவிப் போரிடரை
எரிப்ப வளேயான் இலயமுற் றேனுன் இணையடியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam