रक्ष्योஉस्मि कामपीठीलासिकया घनकृपाम्बुराशिकया ।
श्रुतियुवतिकुन्तलीमणिमालिकया तुहिनशैलबालिकया ॥71॥
லக்ஷ்யோςஸ்மி காமபீடீ லாஸிகயா கனக்ருபாம்பு ராசிகயா |
ச்ருதியுவதி குந்தலீமணி மாலிகயா துஹினசைல பாலிகயா ||71||
காமபீடத்தில் நர்த்தனம் செய்கிறவளும்,
செறிவான கருணை இரசத்தின் கடலானவளும், வேதமாம் இளம்பெண்ணின் கூந்தலை அலங்கரிக்கும் இரத்தின
மாலைகளை போன்றவளும் பனிமலையின் குமாரியானவளும், ஆனவளால் நான் பார்க்கத்தக்கவனாக இருக்கிறேன்.
காமபீ டத்தில் களிநடம் செய்வாள்; கனக்கருணை
சோமக் கடலாம்; சுருதியிளம் வல்லி சுரிகூந்தல்
ஆமென வாக்கும் அணிரத் தினமாலை ஆனாள்பனிப்
பாமையா லேநானும் பார்க்கப் பெறுகிறேன் பாக்கியமே
கனம் - செறிவுமிக்க; சோம - இரசம்; வல்லி - பெண்; சுரிகூந்தல் - சுருண்ட கூந்தல்;
ஆம் - அழகு; பாமை- பெண்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam