शम्पालतासवर्णं सम्पादयितुं भवज्वरचिकित्साम् ।
लिम्पामि मनसि किञ्चन कम्पातटरोहि सिद्धभैषज्यम् ॥53॥
சம்பா லதா ஸவர்ணம் ஸம்பாதயிதும் பவஜ்வர சிகித்ஸாம் |
லிம்பாமி மனஸி கிஞ்சன கம்பாதட-ரோஹி ஸித்த-பைஷஜ்யம் ||53||
உலகவாழ்வாம் (பவம்) நோயினை (ஜ்வரம்) ஆற்றுவதற்காக மின்னல்கொடி போன்றதும், கம்பை நதிக்கரையில் முளைத்ததுமான ஒரு சித்த மருந்தினை என்மனதில் நான் பூசிக்கொள்கிறேன்.
உலகவாழ் வாம்நோய் ஒறுத்தே அறுக்கும் உயர்மருந்தாய்
சிலமீலி கையாலே செய்த கொடிபோல் சிறந்ததுமாய்
கலித்திடு கம்பைக் கரையில் முளைத்த கரணியினை
நலம்பெற உள்ளத்தே நான்பூசிக் கொள்கிறேன் நன்றெனவே
சிலமீலிகை - மின்னல்; கலித்திடும் - பெருகிடும்; கரணி - மருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam