ஏப்ரல் 22, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 52

नन्दति मम हृदि काचन मन्दिरयन्ता निरन्तरं काञ्चीम्
इन्दुरविमण्डलकुचा बिन्दुवियन्नादपरिणता तरुणी 52

நந்ததி மம ஹ்ருதி காசன மந்திரயந்தீ நிரந்தரம் காஞ்சீம் |
இந்து-ரவி-மண்டல-குசா பிந்துவியந்நாத பரிணதா தருணீ ||52||


சூரியசந்திரர்களை மண்டங்களை தனது தனங்களாகக் கொண்டவளும்சக்தியும் (பிந்து/அணு), வாகமாய் விரிந்த நாதவடிவான சிவன் என்று ஒன்றே இரண்டுவித தோற்றமாய் கொண்டவளும் காஞ்சீபுரியை தனது நித்திய இருப்பிடமாகக் கொண்டவளும்ஒரு இளமை பூத்த பெண்ணானவள்என் மனதில் ஆனந்தத்துடன் இருக்கிறாள்நாதவிந்து கலாதீதா நமோநம என்று சிவசக்தி ஐக்யமாகவே அருணகிரிநாதரும் பாடியிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

அம்புலி, ஆதவரே அங்க லிகளாய் அமைந்தாளும்
அம்பர நாத அணுவாய சக்தியும் ஆனவளும்
தம்மிட மாக தவகாஞ்சீ நித்தியம் தங்கினாளும்
எம்முளம் வீற்றே இளமை முகிழ்த்து இருக்கிறாளே

(அம்புலி- சந்திரன்; அங்கலி - கொங்கை; அம்பரம் - வானம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...