ஏப்ரல் 21, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 51

अधिकाञ्चि केलिलोलैरखिलागमयन्त्रतन्त्रमयैः
अतिशीतं मम मानसमसमशरद्रोहिजीवनोपायैः 51

அதிகாஞ்சி கேலிலோலை: கிலாகம யந்த்ர-தந்த்ர மந்த்ர-மயை
அதிசீதம் மம மானஸம் அஸம-சர-த்ரோஹி-ஜீவனோபாயை: ||51||


காஞ்சீபுரியில் விரும்பி விளையாடல்கள் புரிபவளும்அனைத்து வேதங்களும்இயந்திரதந்திரமந்திரங்களின் வடிவாக இருப்பவளும்மன்மதனுடைய வைரியாம் பரமசிவனுடைய உயிருக்கு ஆதாரமாகவும் இருக்கும் ஒன்றினால் உள்ளம் மிகவும் குளிர்ந்திருக்கிறது.

இயந்திர தந்திர ஏற்றவேதம் மந்திரம் எல்லாமும்
வயமா கியதாம் வடிவும், மதனவன் வைரியனார்
உயிரா யதுமாகி ஒண்காஞ்சீ தன்னில் உவந்துகேளி
தயையருள் ஒன்றதால் தானுளம் நன்றென தண்பெறுதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...