मध्येहृदयं मध्येनिटिलं मध्येशिरोςपि वास्तव्याम् ।
चण्डकरशक्रकार्मुकचन्द्रसमाभां नमामि कामाक्षीम् ॥50॥
மத்யேஹ்ருதயம் மத்யேனிடிலம் மத்யேசிரோςபி வாஸ்தவ்யாம் |
சண்டகர சக்ர கார்முக சந்த்ர ஸமாபாம் நமாமி காமாக்ஷீம் ||50||
இதயத்தின் நடுவிலும், நெற்றியின் நடுவிலும், தலையின் நடுவிலும் சூரியனும், இந்திரனின் வில், சந்திரன் போன்றவற்றின் ஒளிக்கு ஒப்பாக இருக்கும் காமாக்ஷியை வந்திக்கிறேன், வணங்குகிறேன். லலிதா சகஸ்ரநாமத்தில், “சிரஸ்த்திதா சந்த்ர நிபா, பாலஸ்தா இந்த்ர தநுஷ்ப்ரபா, ஹ்ருதயஸ்தா ரவிப்ரக்யா” என்று சொல்லியிருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
நெஞ்சின் நடுவில் நிறைந்து பகலோன் நிகர்த்ததும்
விஞ்சரும் இந்திரன் வில்போல் நுதலே விளைந்ததும்
மஞ்சாய் தலையில் மதியொளியை ஒப்ப மதர்த்ததும்
கஞ்சனக் காட்சியை காமாட்சி யைவணங்கிக் காண்பேனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam