कामपरिपन्थिकामिनि कामेश्वरि कामपीठमध्यगते ।
कामदुघा भव कमले कामकले कामकोटि कामाक्षि ॥49॥
காம பரிபந்தி காமினி காமேச்வரி காமபீட மத்யகதே |
காமதுகா பவ கமலே காமகலே காமகோடி காமாக்ஷி ||49||
மன்மதனுக்கு வைரியான சிவபெருமானின் மனதுக்குகந்தவளே! காமேச்வரீ! (லலிதாம்பிகே!) காமகோடி பீடத்தின் நடுவில் வீற்றிருப்பவளே! திருமகள் வடிவே! காமகலை வடிவே! காமகோடியென்னும் பெயர்கொண்ட காமாக்ஷியே! நான் விரும்புவனவற்றைத் தருகின்றவாளாய் ஆவாயாக!
காமனின் வைரியாம் கண்ணுத
லாரைக் கவர்ந்தவளே!
காமயிருக் கைவீற்ற காமேஸ்
வரியான காமாட்சீ!
காமக் கலையின் கருவே
திருவே கமலமாதே
காமகோட்டத் தாளே கருது
வதைநீ கனிவாயே
காமயிருக்கை - காமபீடம்; வைரி - பகைவன்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam