अनुमितकुचकाठिन्यामधिवक्षःपीठमङ्गजन्मरिपोः ।
आनन्ददां भजे तामानङ्गब्रह्मतत्वबोधसिराम् ॥54॥
அனுமித குச காடிந்யாம் அதிவக்ஷ: பீடம் அங்கஜந்மரிபோ: |
ஆனந்ததாம் பஜே தாம் ஆனங்க-ப்ரஹ்ம-தத்வ-போதி-ஸிராம் ||54||
ஊகித்தே உணரக்கூடிய கடின மார்பகங்களைக் கொண்டவள் (பரமசிவனின் மார்புகளே அறிந்திருக்கக் கூடியவை); மன்மதனின் எதிரியான பரமசிவனார்க்கு உள்ளத்தில் மகிழ்ச்சியளிப்பவள்; மன்மதனின் பரம்பொருள் தத்துவமான, காமசாத்திரத்தைக் கற்றுக் கொடுப்பவள். இவளை நான் வழிபடுகிறேன். இந்த ஸ்லோகத்தில் காமாக்ஷி, ஏகாம்பரர், காமகோடி, காஞ்சி, கம்பை போன்ற நேரடியாக சுட்டும் பதங்களில்லை என்பது கவனிக்கத்தக்கது.
உன்னித் துணரவே ஒண்ண உரப்பாய ஒஞ்சியினள்
மன்மதன் வைரி மதிசூடிக் குள்ளம் மகிழ்வளிப்பாள்
மன்மதச் சாத்திர மந்திரம் கற்பிக்கும் மாதவளா
மன்னகா மாட்சியா மன்னையைப் பாடியே மன்னுவனே
உன்னித்து - ஊகித்து; ஒண்ண - கூடிய; உரப்பாய - கடினமான; மன்னுதல் -
தங்குதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam