ஏப்ரல் 17, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 47

अभिदाकृतिर्भिदाकृतिरचिदाकृतिरपि चिदाकृतिर्मातः
अनहन्ता त्वमहन्ता भ्रमयसि कामाक्षि शाश्वती विश्वम् 47

அபிதாக்ருதிர் பிதாக்ருதிர் அசிதாக்ருதிர் அபி சிதாக்ருதிர்மாத: |
அநஹன்தா த்வமஹந்தா ப்ரமயஸி காமாக்ஷி சாச்வதீ விச்வம் ||47||
  

அன்னையே காமாக்ஷிஅழிவில்லாநித்திய உருவினளாய நீ,  வேறுபட்ட பாத்திரங்களாகவும்வேறுபாடுகளே இல்லாத ஒன்றாகவும்பேரறிறிவும்அதுவுமற்ற நிலையும், “தான்” என்றில்லாதவளாயும்தானெனும் நிலையில் உயர்ந்தவளாயும்இருந்துகொண்டு இவ்வுலகத்தை சுழற்றுகிறாயே!

அழிவிலா நித்திய அன்னையே காமாட்சி! அற்புதமாய்
கழிபல வேடமும் காட்டியொன் றாய கருவுமாவாய்,
செழிக்கும் அறிவாய் சிறப்பாய்; இலாதிருக்கும் சித்தும்நீ;
தழலேநீ தானற்றுத், தானாகி சுற்றுறாய் தாரணியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...