कुटिलकचं कठिनकुचं कुन्दस्मितकान्ति कुङ्कुमच्छायम् ।
कुरुते विहृतिं काञ्च्यां कुलपर्वतसार्वभौमसर्वस्वम् ॥4॥
குடிலகசம் கடினகுசம் குந்தஸ்மிதகாந்தி குங்குமச்சாயம் |
குருதே விஹ்ருதிம் காஞ்ச்யாம் குலபர்வத ஸார்வபௌம ஸர்வஸ்வம்
|| (4)
சுருண்ட கேசங்கள் கொண்டது; இறுகிய மார்பகங்கள் கொண்டது; முல்லைபோல் வெளுத்த புன்சிரிப்பால் அழகானது; குங்குமப்பூபோல் சிவந்தமேனி கொண்டது; குலபர்வதங்களின் பேரரசரான ஹிமவானின் அனைத்து செல்வமுமான அது காஞ்சியில் விளையாடுகிறது..
அழகாய் சுருண்ட அளகமும் உண்ணாத அங்கலியும்
குழகாய முல்லைக் குமிழ்புன் சிரிப்பையும் கொண்டவளாம்
குழைகுங் குமப்பூபோல் கொள்நிற மேனியின் கோலமொடு
தொழுமிம வான்குலத் தோன்றலே காஞ்சியில் தோன்றினளே
அங்கலி - கொங்கை; குழகு - இளமை; குழை - தளிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam