चिन्तितफलपरिपोषणचिन्तामणिरेव काञ्चिनिलया मे ।
चिरतरसुचरितसुलभा चित्तं शिशिरयतु चित्सुखाधारा ॥3॥
சிந்திதபல பரிபோஷண சிந்தாமணிரேவ காஞ்சிநிலயா மே |
சிரதரஸுசரித ஸுலபா சித்தம் சி’சி'ரயத் சித் ஸுதாதாரா
|| (3)
விரும்பி நாடியதை நிறைவுறச் செய்து, அதன் பலனாக விரும்பியதையே தருவதில் அவள் சிந்தாமணி ரத்தினம். நீண்ட நாட்கள் தொடர்ந்து நற்பணியாக அவளை வழிபடுவதால் மட்டும் எளிதில் அணுகக் கூடியவள். சித் சக்தி என்ற பேரறிவாற்றலையும், பேருணர்வையும் அமுத தாரையாக உலகில் பரவச் செய்பவள். காஞ்சியில் உறைந்துள்ளவள். அவளென் உள்ளத்தைக் குளிரச் செய்யட்டும்.
சித்திப்பாள் சிந்திக்க சிந்தா மணியாக! சித்பரையை
உத்தமி யாளினை உள்ளத் திருத்த உவந்தருள்வாள்
முத்தியும் ஞானமும் மோதமாய் பெய்கின்ற மூலமவள்
நித்தமும் காஞ்சியில் நின்றுளில் தண்ணளி நிர்மலையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam