पुरतः कदा न करवै पुरवैरिविमर्दपुलकिताङ्गलताम् ।
पुनतीं काञ्चीदेशं पुष्पायुधवीर्यसरसपरिपाटीम् ॥21॥
புரத: கதா நு கரவை புரவைரி விமர்த புளகிதாங்கலதாம் |
புனதீம் காஞ்சீதேசம் புஷ்பாயுத வீர்ய ஸரஸபரிபாடீம்
|| (21)
புரங்களை எரிசெய்த சிவபெருமானது இறுகிய அணைப்பால் புல்லரித்த மென் மேனியாள், பூவை ஆயுதமாகக் கொண்ட மன்மதனின் வீர்யத்தின் அழகாகன உருவமாக இருப்பவள்; காஞ்சீபுரியைப் புனிதப்படுத்துபவள். அவளை எப்போது என்முன் கொள்வேன்?
புரங்க ளெரித்தாரைப் புல்கி யுடலில் புளகமுற்றும்
புரந்துமே காஞ்சீ புரியை அருளால் புனிதமாக்கும்
இரதிகாந் தன்தன் இரசத் துருவாய் இருப்பவளை
அரனார் சதியை அருகென்று சேர்வேன் அறிந்திலனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam