श्वेता मन्थरहसिते शाता मध्ये च वाड्भनोஉतीता ।
शीता लोचनपाते स्फीता कुचसीम्नि शाश्वती माता ॥20॥
ச்வேதா மந்த்ர ஹஸிதே சாதா மத்யே ச வாங்மனோதீதா |
சீதா லோசனபாதே ஸ்பீதா குசஸீம்னி சாச்வதீ மாதா ||
(20)
அழிவில்லாத, சாஸ்வதனமான என் தாயாம் காமாக்ஷியானவள், தன் மென்சிரிப்பில் வெண்ணிறமுள்ளவள்; இடை சிறுத்தவள்; வாக்கிற்கும், எண்ணத்துக்கும் உட்படாதவள்; பார்வையில் குளிர்ந்தவள்; புஷ்டி மிகுந்த மார்பினள்.
இளநகை வெண்மை, இளைத்த சிறிய இடையுடைத்தாள்
அளப்பிலா வாக்கினள்; அன்னை நினைப்புக்கும் அவ்வருகாம்;
குளிர்ந்தயின் பார்வையாள்; குன்றெனப் பூத்த குசத்தவளாம்;
உளத்தினில் தாயவள் உத்தமி நித்தியள் ஊன்றினளே.
குசம் - மார்பகம்; அவ்வருகு
- அப்பால்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam