மார்ச் 18, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 17

मधुरस्मितेन रमते मांसलकुचभारमन्दगमनेन
मध्येकाञ्चि मनो मे मनसिजसाम्राज्यगर्वबीजेन 17

மதுர ஸ்மிதேன ரமதே மாம்ஸல குசபார மந்த கமனேன |
மத்யே காஞ்சி மனோ மே மனஸிஜ ஸாம்ராஜ்ய கர்வ பீஜேன ||  (17)

இனிய புன்சிரிப்போடு கூடியதும், பருத்த தனபாரத்தினால், மெதுவான நடையோடு கூடியதும், காஞ்சீ நகரின் மத்தியில், மன்மதனுடைய அரசாட்சி செய்வதினால், அவனுக்கு உண்டான அகந்தைக்கு, மூல வித்தாக இருக்கும் பரம்பொருளால் என்னுடைய மனமானது களித்துக்கொண்டிருக்கிறது.

இன்னகை ஏந்தி, இடைச்சுமை கூடும் எழில்தனத்தால்
மென்னடை கொண்டது, மேவிடும் காஞ்சி மிசையினிலே!
மன்மத னாட்சி மமதைக்கே காரண மாயதுவாம்
உன்முகி யாமதால் உள்ளம் மகிழ்ந்து உவக்கிறதே 


(உன்முகி - உயர்வாயது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...