धरणिमयीं तरणिमयीं पवनमयीं गगनदहनहोतृमयीम् ।
अम्बुमयीमिन्दुमयीमम्बामनुकम्पमादिमामीक्षे ॥18॥
த4ரணிமயீம் தரணிமயீம் பவனமயீம் ககன தஹன ஹோத்ருமயீம் |
அம்புமயீம் இந்துமயீம் அம்பாம் அனுகம்பம் ஆதமாம் ஈஷே ||
(18)
உலகம், சூரியன், வாயு, வானம், தீ, நீர் (சலம்), கர்தன் (வேள்வி செய்பவன்), சந்திரன் இவர்கள் வடிவிலெலாம், சகலமாயும் இருக்கிற, இவ்வண்டத்திற்கெல்லாம் முதலாய் உலவுகின்ற அன்னையை ஓடுகின்ற கம்பை நதிக்கரையில் உணர்ந்து கண்டேனே.
உலகின் உருவில், உதிக்கும் உதயன் உருவிலுமாய்
வலமிடு வாயு வடிவினில் வான வடிவிலுமாய்
சலம்தீ கருத்தனாய் சந்திர னோடு செகமுதலாய்
உலவுமம் மையை உரவுகம் பைத்தீரம் ஓர்ந்தனனே
உரவு - ஓடிக்கொண்டிருக்கிற;
ஓர்ந்தனன் - உணர்ந்தறிந்தனன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam