4th Dec, 2015
தும்முச்
செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ
என்று.
(குறள் 1318:
புலவி நுணுக்கம் அதிகாரம்)
தும்முச் செறுப்ப - தும்மலை
அடக்கினேன்
அழுதாள் - அதற்கும் அவள் அழுதாள்
நுமர் உள்ளல்
- உம்மை பிறப்பெண்கள் நினைப்பதை
எம்மை மறைத்திரோ என்று - எம்மிடமிருந்து மறைத்திடவேதான் செய்தீர் என்று
மீண்டும் தும்மலை வைத்தே ஒரு குறள். தலைவன் தான்
தும்முதலை காதலி தவறாகக் கொண்டு அழுகிறாளே என்று, தும்மல் வரும் போது, அதை அடக்கிகொண்டானாம்.
அதைக் கண்ட காதலி, அழுதாளாம், “ உமைப் பிறப்பெண்கள் நினைப்பதை நான் அறியக்கூடாது என்பதற்காகத்தானே
என்னிடமிருந்து தும்மலை மறைக்க அடக்கினீர்” என்று கூறி. இவ்வாறு தும்மினாலும் தவறு,
தும்மலை அடக்கலையும் தவறு என்று காதலி துயருற்றால், காதலன் என்னத்தான் செய்வான்?
Transliteration:
Thummuch cheRuppa azhudAL numaruLLal
Emmai maRaiththirO enRu
Thummuch cheRuppa – I controlled my sneeze
azhudAL – seeing that she cried saying this
numar uLLal – other
women thining of you
Emmai maRaiththirO enRu – saying that you tried to hide from me
Another verse with sneeze! He thinks
that his maiden mistakes him if he sneezes that other women are thinking of
him; so he tries to control the sneeze; but seeing that the maiden cries again
saying, “inorder to hide that other women are thinking of you, you tried to
hide your sneeze”. What would a man do if his maiden mistakes him whether he
sneezes or controls the sneeze?
“I controlled the sneeze; but she would still
cry,
saying ‘you
hide others thinking of you in sly”
இன்றெனது குறள்:
விம்முவாள்
மற்றோர் நினைத்தல் மறைத்ததாய்
தும்ம லடக்கினும்
நான்
vimmuvAL
maRROr ninaittal mARaittadAi
tumma laDakkinum nAn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam