5th Dec, 2015
தன்னை உணர்த்தினும்
காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர்
ஆகுதிர் என்று.
(குறள் 1319:
புலவி நுணுக்கம் அதிகாரம்)
தன்னை உணர்த்தினும் - அவள் ஊடல் தணித்து ஆற்றினும்
காயும் - என் காதலி காய்ந்து மீண்டும் ஊடுவாள்
பிறர்க்கும் - மற்ற பெண்களிடத்தும்
நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று - நீங்கள் இத்தன்மையராகத்தான் இருப்பீர் என்று
காதலி ஊடியிருக்கிறாளே என்று பணிந்து சென்று அவளைத்
தணித்தாலும், அவள் என்னை வெகுளுவாள், “நீர் பிற பெண்களிடத்திலும் இவ்வாறு பணிந்தும்
தணித்தும் செய்யும் தன்மை உடையவர்தாமே என்று” கூறி! காதல் பெண்டிரைப் போற்றினும் அவர்கள்
ஏதேனும் இவ்வாறு குற்றம் கண்டுபிடித்து வெகுளுவார்கள் என்றுணர்த்தி அவர்கள் மாட்டு
யாது செய்வது என்று அங்கலாய்க்கும் குறள்.
Transliteration:
Thannai
uNarttinum kAyum piRarkkumnIr
innIrar
Agudir enRu
Thannai
uNarttinum
– Even if I resolve the love quarrel between us, by coaxing her
kAyum – she would still be
displeased and angry with me saying:
piRarkkum – even for other women
nIr innIrar
Agudir enRu
– you would be sweet-talk and coax like this!
To pacify the maiden in love-quarrel, I would coax and cajole
her; but she would still be displeased and angry at me accusing me saying,
“Even for other women, you would sweet-talk similarly and coax like this”. Even
a man bends his back to please his maiden to resolve the quarrel, she would
find fault with him for some reason and he would wonder, what would be the
right course of action!
“Though I
resolved the love-quarrel, between us by coaxing her, It is true,
She would still be angry saying, ‘You would do
the same trick to others too’”
இன்றெனது குறள்:
பிணக்கைத்தீர்த்
தாலுமவள் ஊடும் பிறர்க்கும்
வணங்கிச்செய்
வேனிவ்வா றென்று
piNakkaittIrth tAlumavaL UDum piRarkkum
vaNangichchei vEnivvA RenRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam