டிசம்பர் 22, 2015

ஷோடஸ கணபதி 1 - (ஸுமுகன் - இன்முகன்)

The purpose of life is to find something new to do every day.
Having finished the commentary work on (not exactly complete.. complete... in terms editing and publishing it at least as an E-Book), and have been away on sort of forced vacation for almost a week, I am back; having also completed an AndAdhi (end-begin) Sathakam (100 verses) on SkandA, a month ago, I wanted to write a similar one on Ganesha, the universal obstacle remover and almost undoubtedly the favorite of all children. 
Though completed about 15 verses on that, as suggested by dear friend and one who is personification of AWE and INSPIRATION, Ravi Subramanian, I started writing some random theme in KaTTaLai kAlitturai (similar to AbhirAmi AndAdhi). During my trip to Florida it occurred to me that, it should be on 16 names of Ganesha.. (ShOdasa GaNapathi). So, next 16 days, with his blessings, I will post one verse every day, in KaTTaLai kAlitturai meter.
Here is the excerpts from what Kanchi Mahaswami has said about ShODasa nAmAs of GanEshA, in Deivathin Kural. Before seeing the verse of today, let's read what Mahaswami says..

ஷோடச நாம சுலோகங்கள் :

விக்நேச்வரருக்குப் பதினாறு பேர் முக்கியமாக சொல்லியிருக்கிறது.
ஸுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணகர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்த்ரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர் என்று பதினாறு பேர். "ஷோடச நாமா"என்று விசேஷமாகச் சொல்வது. ஸுலபமாக ஞாபகம் வைத்துக்கொண்டு ஸ்தோத்திரம் பண்ணுவதற்கு வாகாக இந்தப் பதினாறு பேர்களை இரண்டு ச்லோகங்களாக வைத்துக் பண்ணியிருக்கிறது.
ஸுமுகச் - சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக : l
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக : ll
தூமகேதுர் - கணாத்யக்ஷ : பாலசந்த்ரோ கஜாநந : l
வக்ரதுண்ட : சூர்பகர்ணோ ஹேரம்ப : ஸ்கந்தபூர்வஜ : ll
இதற்கப்புறம் நான் முதலில் சொன்ன ஸ்லோகம். வழக்கமாக உள்ள இரண்டு வரி ச்லோகத்துக்கு வித்யாஸமாக மூன்று வரி ஸ்லோகம்.
ஷோடசைதாநி நாமாநி ய : படேத் ச்ருணுயாதபி l
வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேசே நிர்கமே ததா ll
ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்நஸ்தஸ்ய ந ஜாயதே ll
விக்நேஸ்வரர் அநேக ரூபங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதிலே ஷோடச கணபதி என்று பதினாறு ரூபங்கள் ஒரு 'க்ரூப்'பாக உண்டு. அந்தப் பதினாறு மூர்த்திகளுடைய பெயர்கள்தான் இந்தப் பதினாறு நாமாவா என்று பார்த்தேன். அப்படி இல்லை என்று தெரிந்தது. ஷோடச நாமாக்களில் மூன்றாவது கபிலர் என்பது. அப்படியென்றால் பாக்கு மாதிரி சிகப்பு நிறமாயிருப்பவரென்று அர்த்தம். ஆனால் ஷோடச ரூபங்களில் மூன்றாவதாக வருகிறவரையே சரத்கால சந்திரன் மாதிரியான நிறமுள்ளவரென்று த்யான ஸ்லோகம் சொல்லுகிறது. ஷோடச ரூபங்களிலோ பதினொன்றாமவராக வருகிறவருக்கே ஹேரம்ப கணபதி என்று பெயர் கொடுத்திருக்கிறது. இப்படிப் பல வித்யாஸங்கள். வரிசைக் க்ரமமாக இந்த ஷோடச நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும், ஷோடச கணபதிகளில் ஒவ்வொருவர் என்று இல்லை. இது வேறே. அது வேறே க்ளாஸிஃபிகேஷன் என்று தெரிந்தது.
-----------
ஷோடச கட்டளைக் கலித்துறை கணபதி: 1. சுமுகன் (இன்முகன்)
ஆனந்த இன்முகம் அன்புடன் காட்டிடும் ஆனைமுகம்
வானவர் போற்றிடு வாரணம் பூரண வாழ்வருளும்
ஏனமும் ஊனமும் இன்றிட வேண்டுவோர் ஏற்றமுற
மோனத் தொடுஞானம் மொய்ம்புகழ் ஈயும் முழுமுதலே
(ஏனம் - குற்றம்)

āṉanta iṉmukam aṉpuṭaṉ kāṭṭiṭum āṉaimukam
vāṉavar pōṟṟiṭu vāraṇam pūraṇa vāḻvaruḷum
ēṉamum ūṉamum iṉṟiṭa vēṇṭuvōr ēṟṟamuṟa
mōṉat toṭuñāṉam moympukaḻ īyum muḻumutalē

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...