டிசம்பர் 23, 2015

ஷோடஸ கணபதி 2 - (ஏகதந்தர் - ஒற்றைத்தந்தர் )

மீண்டும் காஞ்சி மஹாஸ்வாமிகளின் அருள் வாக்கில் ஏகதந்தரைப் பற்றி.

ஏகதந்தர் : ' என்பும் பிறர்க்குரியர் '

அடுத்தாற்போல், ஏகதந்தர் ஸுமுகச்-சைகதந்தச்ச. இரண்டாவது பேர் ஏகதந்தர். அப்படியென்றால் ஒரே தந்தமுடையவரென்று அர்த்தம். ஒற்றைக் கொம்பன். பொதுவாக ஆண் யானைக்கு இரண்டு கொம்பு இருக்கும். பெண் யானைக்குக் கொம்பே கிடையாது. இவருக்கோ ஒரே கொம்பு.

முதலிலே இவருக்கும் இரண்டு (கொம்பு) இருந்து, அப்புறம் வலது பக்கம் இருப்பதை இவரே ஒடித்துக் கொண்டு விட்டார். அதை விக்ரஹங்களில் வலது பக்கக் கீழ்க் கையில் வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஏன் ஒடித்துக்கொண்டார்?புராண ரீதியில் இரண்டு கதை சொல்கிறார்கள்.

வியாஸர் பாரதம் சொல்லுகிறபோது அதை உடனே விக்நேச்வரர் அவஸரமாக
ஹிமாசலப் பாறைகளில் எழுத வேண்டியிருக்கிறதென்றும், அப்போது எழுத்தாணிக்காகத் தேடிக்கொண்டு ஒடாமல் தந்தங்களில் ஒன்றையே முறித்து அதனால் எழுதினாரென்றும் ஒரு கதை. அறிவு வளர்ச்சிக்காகத் தம்முடைய பஹ§ அழகான அங்கத்தை யானையின் அங்களுக்குள்ளேயே இறந்தாலும் ஆயிரம் பொன் என்று ரொம்பவும் மதிப்புள்ளதாயிருப்பதை - உயிரோடு இருக்கும்போதே தியாகம் செய்த உத்தம குணத்தைக் காட்டும் கதை.

இன்னொரு கதை, மற்ற எந்த அஸ்திரத்தாலும் வதம் பண்ண முடியாத கஜமுகாஸுரனைத் தம்முடைய ஒரு தந்தத்தையே முறித்து ஆயுதமாக்கிப் ப்ரயோகித்து வதம் பண்ணினாரென்பது. லோக ரக்ஷணத்துக்காக என்பும் உரியர் பிறர்க்கு என்று காட்டிய கதை. ஸாதாரணமாக அந்தக் குறளுக்கு ததீசியைத்தான் த்ருஷ்டாந்தம் காட்டுவார்கள். தந்தமும் யானையின் எலும்புதான். அதனால் பிள்ளையாரும் என்பும் பிறர்க்கு உரிய'ரான அன்புடையார் தான்!

பெண்ணாகவும் இருப்பவர்

அவர் ஏகதந்தராக இருப்பதற்குத் தத்வார்த்தமும் உண்டு. ஆண் யானைக்குத்தான் தந்தம் உண்டு. பெண் யானைக்குக் கிடையாது. தாம் ஆண், பெண் இரண்டும்தான். அதாவது ஈச்வர தத்வம் என்பது ஆண்தான், பெண்தான் என்று ஒன்றாக மாத்திரம் வரையறுக்க முடியாமல் இரண்டுமாக ஆகியிருக்கும் ஒன்று என்று காட்டவே முகத்திலே ஒரு பக்கம் யானை (களிறு என்றும்) மாதிரி தந்தத்துடனும், மறு பக்கம் பெண் யானை (பிடி என்பது) மாதிரி தந்தமில்லாமலும் இருக்கிறார். மாதா பிதாக்கள் பப்பாதி (பாதிப் பாதி) ஸ்த்ரீ-புருஷர்களாக அர்த்த நாரீஸ்வர ரூபத்தில் இருக்கிற மாதிரியே புத்ரரும் கொஞ்சம் இருந்து காட்டுகிறார். அப்படியே காப்பி பண்ணினதாக இருக்க வேண்டாமென்று அங்கே வலது பக்கம் புருஷ ரூபம், இடது ஸ்த்ரீ என்றிருந்தால் இவரோ வலது பக்கம் தந்தமில்லாமல் பெண் யானையாகவும் இடது பக்கம் தந்தமுள்ள ஆண் யானையாவுமிருக்கிறார்

ஷோடச கட்டளைக் கலித்துறை கணபதி: 2. ஏகதந்தர் (ஒற்றைத்தந்தன்/ஒற்றைக் கொம்பன்)

ஒடித்தொரு கொம்பால் உயர்காவி யங்கீறு உன்னதனை
வடிவைத் துறப்பினும் வாழ்வை பிறர்கீயும் வாரணனை
பிடிக்கப் பதந்தரும் பேறாம்மொற் றைத்தந்தப் பிள்ளையினை
விடிவைத் தருகின்ற வேழத்தை நாளும் விரைமனமே

கீறு - எழுது

oṭittoru kompāl uyarkāvi yaṅkīṟu uṉṉataṉai
vaṭivait tuṟappiṉum vāḻvai piṟarkīyum vāraṇaṉai
piṭikkap patantarum pēṟāmmoṟ ṟaittantap piḷḷaiyiṉai

viṭivait tarukiṉṟa vēḻattai nāḷum viraimaṉamē

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...