நவம்பர் 17, 2015

குறளின் குரல் - 1307

131: (Sulking  - புலவி)
 [This chapter is about sulking, bouderie or love quarrel between maiden and her beloved; it  discusses the nature, how much it can be between lovers and  advises the lovers about the extent to which it can be carried etc.]

17th Nov, 2015

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

                           (குறள் 1301: புலவி அதிகாரம்)

புல்லாது - தழுவிக் கூடாது
ரா அப் புலத்தை - ஊடுதலை விட்டு விடாதே
அவர் உறும் - அவர் இவ்வூடலால் கொண்ட
அல்லல் நோய் - அவத்தையாகிய துன்பத்தைக்
காண்கம் சிறிது - காண்போம் சிறிது.

தோழி காதற்தலைவியிடம் இவ்வாறு கூறுகிறாளாம் - “நீ உன்னுடைய ஊடலைக் கைவிட்டு அவனோடு சென்று கூடிவிடாதே. உன்னுடைய ஊடலால் அவன் உறும் துன்ப நோயைச் சற்று காண்போம் நாம். இதில் உள்ள உட்குறிப்பு, ஊடலால் அவன் உறும் துன்பமும், பின் கூடலுக்கு இனிமையென்பதால் தோழி இவ்வாறு கூறுகிறாள்.

Transliteration:

pullA dirAap pulattai avaruRum
allalnOi kANgam siRidu

pullAd(u) – Not in embrace
irA ap pulattai – Don’t give up your love quarrel
avaruRum – that he has
allal nOi – the pain of this love-quarrel
kANgam siRidu – let us watch a little

Maidens’ friend speaks to her thus: “Don’t give up your love-quarrel with your beloved and rush to be in his embrace; let’s watch a little the pain of this in him for a while” There is an inherent hint in this to the maiden that the reunion would be sweeter after that quarrel.

“Giving your love-quarrel, don’t rush for an embrace
 Let’s watch his distress of pain for a while to tease”

இன்றெனது குறள்:

கூடாதே ஊடலை விட்டவர் துன்பநோய்கண்
கூடாகத் தான்பார்ப்போம் சற்று

kUDAdE UDalai viTTavar tunbanOikaN
kUDAgat tAnpArppOm chaRRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...