18th Nov, 2015
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
(குறள் 1302:
புலவி அதிகாரம்)
உப்பு அமைந்தற்றால் - உப்பு உணவுக்கு அமைவது போலாம்
புலவி - ஊடலும் (அளவோடு இருத்தல் வேண்டும்)
அது சிறிது - அது சிறிதளவுக்கு
நீள விடல் - நீட்டித்தல் என்பது
மிக்கற்றால் - அவ்வுப்பு கூடியதுபோலாம் (கூடலின் சுவையே கெடும்)
“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பது வழக்கு.ஆனால்
அவ்வுப்பே சிறிது கூடினாலும் உணவு சுவை கெடும் என்பதும் உண்மை. அத்தன்மைத்தே ஊடலும்,
காதல் வாழ்வுக்கு! உப்பு சரியான அளவில் இல்லாது, கூடிவிட்டால், உணவின் சுவையும் கெடுவது
போலே, காதலருக்கிடையே கூடலும் தேவைக்கு மிகுதியானால் அதன் சுவை கெடும். உப்பும் ஊடலும் குறைவாக இருந்தால் கேடில்லை.
கூடினால்தான் சுவைக்குக் கேடே!
Transliteration:
Uppamain daRRAl pulavi adhusiRidu
mikkaRRAl nILa viDal
Upp(u) amaindaRRAl –
Like how salt is to food
pulavi - is love quarrel (should be within limits)
adhu siRidu – Even If by small
measure
nILa viDal – to extend it (beyond what is
tolerable)
mikkaRRAl – like how the the salt is in excess
(the taste of union will spoil)
“Saltless food is for garbage” is
popular saying in Tamil. If that salt is even slightly in excess, it spoils the
taste of the the food. Love quarrel is
similar to that between lovers. If it exceeds a limit, the love would become sour.
It salt is less, we can always add to bring it to taste; Same applies to love
quarrel to.
“Love-quarrel is like salt to food
In
excess it spoils and not good”
இன்றெனது குறள்:
ஊடல் உணவுக்கு
உப்பைப்போல் கூடினால்
கூடலுக்கு
இன்றே சுவை
Udal
uNavukku uppaippOl kUDinAl
kUDalukku
inRE suvai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam