நவம்பர் 16, 2015

குறளின் குரல் - 1306

16th Nov, 2015

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

                           (குறள் 1300: நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்)

தஞ்சம் தமர் அல்லர் - தன்னோடு உறவிலே தஞ்சமாயிருக்கமாட்டார்
ஏதிலார் - அந்நியர்
தாமுடைய நெஞ்சம் - தமக்கே உரித்தான தனது நெஞ்சமே
தமர் அல் வழி - தமக்கு உறவாய் இல்லாதபோது.

இதுவும் தலைவி தன்னோடு அணுக்கமாயிராத தன்னெஞ்சைப் பற்றி நொந்து கூறுவது.  தமக்கே உரிய நெஞ்சமே ஒருவருக்கு அணுக்கமான உறவாய் இல்லாதபோது, அந்நியரான பிறர் எவ்வாறு தமக்கு அணுக்கமாயிருப்பர் என்று சொல்லி வருந்துகிறாள காதற்தலைவி இக்குறளில்.

Transliteration:

Tanjam tamarallar EdilAr tAmuDaiya
Nenjam tamaral vazhi

Tanjam tamar allar – won’t be in close relationship
EdilAr – others that are strangers
tAmuDaiya Nenjam – if the heart that belongs to self
tamar al vazhi – is unfriendly and acts like a stranger

Even in this verse, the maiden complains about her own heart that acts like a stranger not being close to self. If the heart that belongs to self is not close enough  and be in friendly terms, how do we expect strangers to be close and be friendly? – she asks!

“If my heart is not friendly and close to me
 How can I expect that of strangers to be?”

இன்றெனது குறள்:

தம்நெஞ்சே தம்முறவாய் தாம்கொள்ளார்க் கந்நியர்
அம்முறை யாவாதெவ் வாறு?

tamnenjE tamuRavAu thAmkoLLArk kanniyar
ammuRai yAvadev vARu?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...