நவம்பர் 15, 2015

குறளின் குரல் - 1305

15th Nov, 2015

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

                           (குறள் 1299: நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்)

துன்பத்திற்கு - பிரிவாற்றாமையாம் துன்பத்திற்கு
யாரே துணையாவார் - யார்தான் துணையாக, ஆறுதலாக இருப்பார்?
தாமுடைய நெஞ்சந் - தாம் கொண்ட நெஞ்சமே
துணை ல் வழி - துணையில்லா விட்டால்?

தலைவி இக்குறளில் தன்னுடைய நெஞ்சம் தமக்குத் துணை நிற்காமல், தலைவன்பால் ஈர்க்கப்பட்டு சென்றதைக் கண்டு, அதனிடமே முறையிடுகிறாள்.  பிரிவாற்றாமையாகிய துன்பத்தில் நான் உழலுகையில் துணையாக இருக்கவேண்டிய நீயே துணையாக இல்லாவிட்டால், வேறு யார்தான் அவ்வாறிருப்பார்? நீயே கூறு என்கிறாள்.

Transliteration:

tunabattiRku yArE tuNaiyAvAr thAmuDaiya
nenjan tuNaiyal vazhi

tunabattiRku  - during distress (due to her lover going away)
yArE tuNaiyAvAr – who shall be an appropriate companion
thAmuDaiya nenjan – heart of self
tuNai al vazhi – if not the right support and companion?

In this verse, the maiden complains that her heart, drawn to her lover, deserted her! She says, “When I am in distress because of his leaving,  if you, who is supposed to be my companion and support are not so, who else shall be so? Please tell me!

“O! my heart, In distress if you’re not my support
 Who shall I expect and count as my support?

இன்றெனது குறள்:

நெஞ்சமே உந்துணை இன்றியொரு துன்பிற்கு
எஞ்சும் துணையாரோ சொல்?

nenjamE untuNai inRiyoru tunbiRku
enjum tuNaiyArO sol?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...