நவம்பர் 13, 2015

குறளின் குரல் - 1303

13th Nov, 2015

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

                           (குறள் 1297: நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்)

நாணும் மறந்தேன் - என்னுடைய நாணத்தையும் நான் மறந்தேன்
அவர் மறக்கல்லா - அவரை மறக்க முடியாமல்
என் மாணா - என் மாட்சிமை இழந்த
மட நெஞ்சிற் பட்டு - அறியா மனத்தோடு இயைந்து

என்னுடைய இயல்பான நாணத்தையும் நான் மறந்துவிட்டேன், இந்த மாட்சிமையை இழந்த என்னுடைய நெஞ்சினால் அவனை மறக்க முடியாமல் என்று தன் நெஞ்சின் உறுதியற்ற தன்மையை நொந்து, தன்னுடைய இயலாமையை நெஞ்சுக்குரியதாக்கிக் கூறுகிறாள் காதற் தலைவி, இக்குறளில். அவன் பிரிந்து சென்று வந்தமைக்காக ஊடாது அவனைக் கண்ட மாத்திரத்தில் கலவிக்காய் அவனோடு இணங்குவதை அவள் மாணிழத்தலாக நினைக்கிறாள்.

Transliteration:

nANum maRndEn avarmaRak kallAen
mANA maDanenjiR paTTu

nANum maRndEn – I even forgot my modesty
avar maRakkallA – not able to forget him
en mANA – my dignity-lost
maDa nenjiR paTTu – going with my ignorant heart

“I forgot even my innate modesty, because of this heart that has lost dignity not being able to forget him”, complains the maiden about her ignoble hearts’ lack of resolve, in a way pinning her inability on her heart. She knows that her heart has goes after him, for union, despite his leaving him and coming back, instead of indulging in love-quarrel.

“I lost my modesty, not able to forget,
 keeping him in my heart, dignity lost”

இன்றெனது குறள்:

மாணிலா தென்மட நெஞ்சோ டியைந்துநான்
நாணிழந் தேன்மறக்கொ ணாது

mANilA denmada nenjO DiyaindunAn
nANizan dEnmaRakko NAdu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...