14th Nov, 2015
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
(குறள் 1298:
நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்)
எள்ளின் - இகழ்ந்தால்
இளிவாம் - அது தமக்கே இழிவாம்
என்று எண்ணி - என்று கருதி
அவர்திறம் - காதலன் சிறப்புகளை
உள்ளும் - நினைத்துப்பார்க்கும்
உயிர்க்காதல் நெஞ்சு - அவர்மேல் உயிர்காதல் கொண்ட நெஞ்சம்
காதலன்
பிரிந்து சென்றிருக்கிறான். அவனது இச்செயலுக்காக, அவனை இகழ்ந்து பேசினால், அது தமகே
இழிவைத் தரும் என்று கருதி காதலனது சிறப்புகளை மட்டுமே பார்க்கிறாதம், அவன் மேல் உயிர்க்காதல்
கொண்ட நெஞ்சு, என்று காதற்தலைவி தன்னுடைய நெஞ்சத்தை நோகிறாள்.
Transliteration:
eLLin iLivAmenRu eNNi
avartiRam
uLLum uyirkAdal nenju
eLLin – if blamed
iLivAm – it is only shame for self
enRu eNNi – so thinking
avartiRam – his glorious ways,
uLLum – thinks
uyirkAdal nenju
– the heart that loves him so dearly.
Lover
has gone away leaving the maiden; her heart thinks, if it blames him for the same,
it would tantamount to self-shame! And hence, ignoring his faults, the heart
that loves him so dearly, looks only at his good aspects – so complains the
maiden about her heart that is drawn to the lover despite him leaving her.
“If he is blamed it would be only self-shame!
So
thinks her heart that dearly loves him”
இன்றெனது குறள்:
இகழ்தல் இழிவாய் கருதியே நெஞ்சம்
அகத்தார் திறமெண்ணும் நின்று
igazhtal izhivAi karudiyE nenjam
agattAr tiRameNNum ninru
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam